சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா - கடும் பாதுகாப்புடன் வெலிக்கந்தைக்கு அனுப்பப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா - கடும் பாதுகாப்புடன் வெலிக்கந்தைக்கு அனுப்பப்பட்டார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை மருத்துவமனைக்கு இன்று அதிரடிப் படையினரால் அவர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சஹ்ரான் ஹசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உட்பட 28 பேர், வெலிகந்ததை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment