ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் அலட்சியம் செய்கின்றது - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் அலட்சியம் செய்கின்றது - இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து தீர்வு காணுமாறு ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை அரசாங்கம் அலட்சியம் செய்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.

கொவிட்-19 தொற்று நோய் பரவுவதற்கு முன்னதாகவே ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கேட்டிருந்த போதிலும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கிடப்பில் போட்டுவிட்டது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கூறினார்.

2021 பட்ஜெட்டில் ஆசிரியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதாக முன்னைய கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும் தற்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸும் உறுதியளித்திருந்தார்கள்.

ஆனால் பட்ஜெட்டில் அது கவனத்தில் எடுக்கப்படவேயில்லை என்றும் முன்னாள் அமைச்சர் றிச்சர்ட் பத்திரன 1994 ஆம் ஆண்டில் செய்த விதப்புரைகளின பிரகாரம் ஆசிரியர்களின் சம்பளங்களை மீளாய்வு செய்து சம்பள முரண்பாடுகளை சீர்செய்யுமாறு தாங்கள் கோருவதாகவும் ஜோசப் ஸ்ராலின் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad