இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டம் வகுக்கப்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டம் வகுக்கப்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று (21) நாடாளுமன்றில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பத்திரிகை கவுன்சில் சட்டம் குடிமக்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைத்து குடிமக்களின் உரிமைகளும் ஊடகங்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் ஊடக ஒழுங்குமுறைகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊடகவியலாளர்களுகான காப்பீட்டு திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad