இன்று முதல் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுப்பு - விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

இன்று முதல் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுப்பு - விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் இன்று (07) முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தொற்று நோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொவிட்-19 தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்குமாறு சுகாதார அமைச்சினால் விடுத்துள்ள சுற்று நிரூபத்திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் செயல்முறை இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தொற்று நோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment