சத்திர சிகிச்சை செய்துகொண்ட நபருக்கு கொரோனா - வைத்தியர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

சத்திர சிகிச்சை செய்துகொண்ட நபருக்கு கொரோனா - வைத்தியர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஹோமாகம வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவருக்கு எதேர்ச்சையாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் குடிபோதையில் இருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபருக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த நபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment