கொழும்பு மாவட்டத்தில் 4,34,776 குடும்பங்களுக்கு 2173.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

கொழும்பு மாவட்டத்தில் 4,34,776 குடும்பங்களுக்கு 2173.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது - செஹான் சேமசிங்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாவட்டத்தில் கொராேனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள 4,34,776 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக 2173.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் 1,03,252 குடும்பகள் வாழ்வதுடன், சனத் தொகை அடிப்படையில் 4,98,833 பேர் உள்ளனர். 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாடி வீட்டுத் திட்டங்களில் 8486 குடும்பங்கள் வாழ்வதுடன், சனத் தொகை அடிப்படையில் 42380 பேர் உள்ளனர்.

அதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் 4,34,776 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதற்காக 2173.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள 31,720 குடும்பங்கள் மேன்முறையீடு செய்துள்ளன. அவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 19,933 தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக 199.3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராம சேவகர்கள் மூலம் இந்தச் செயற்பாடு இடம்பெறுகிறது. 

கொவிட் காரணமாக கொழும்பு மாவட்ட பிரதேச செயலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும் ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சூழலிலும் கடந்த 9ஆம் திகதி முதல் 5000 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment