வெள்ளத்தில் மூழ்கிய பதிவாளர் அலுவலகம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

வெள்ளத்தில் மூழ்கிய பதிவாளர் அலுவலகம்

பதிவாளர் நாயகத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்குள் வெள்ளம் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையின் காரணமாக நான்கு மாடிகளைக் கொண்ட இக் கட்டடத்தின் முதல் கட்டடத்துக்குள் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது.

வெள்ளம் உட்புகுந்த அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இது தொடர்பாக கூறுகையில், இவ் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது எதிர்பார்க்காத ஒரு விடயம். எனினும் உடனடியாக பொறியியலாளர் அழைக்கப்பட்டு கட்டடத்தில் ஏற்பட்டுள்ள சேதம் உடனடியாக திருத்தி அமைப்படவுள்ளது.

அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் அலுவலகம் பூராகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment