குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவேளை உயிரிழந்துள்ளார் என குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவரின் மகன் சில நாட்களுக்கு முன் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் என்றும் குறித்த முதியவர் மிக நீண்ட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த திருமண நிகழ்வில் மணமகனுக்கு கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததை அடுத்து முதியவர் தங்கியிருந்த வீட்டில் உள்ள அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். குறித்த முதியவரும் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்தி குறித்த முதியவரின் சடலம் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலை பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
குறித்த நபரின் உடலிலிருந்து பல மாதிரிகள் எடுத்து பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் குறித்த மாதிரி பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் கிடைக்கும் வரை இறுதிக் கிரியை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்
No comments:
Post a Comment