இருபதாவது திருத்தத்திற்கு வாக்களிப்பதை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
20வது திருத்தத்தின் பல பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ள போதிலும் 20வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்பது என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவுகளை இந்த தரப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்னர் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆகவே இவை தேவையற்றவை மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியவை என தெரிவித்துள்ளது.
எங்கள் மக்களின் உரிமையான எங்கள் அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள பாரம்பரியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்து ஒரு கட்சியாக நாங்கள் கவலையடைந்துள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment