திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 9 ராக்கட் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பலாகாமம் ஜயபுர காட்டுப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று (21) 9 தோட்டாக்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
9 மில்லி மீற்றர் அளவுடையதாக 9 தோட்டாக்களும் காணப்படுவதாகவும், அதிக சக்தியுடைய தோட்டாக்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டாக்களை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment