பாகிஸ்தானில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

பாகிஸ்தானில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டொக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு.

அந்த வகையில், டிக் டொக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு ஒக்டோபர் 10ம் திகதி முதல் தடை விதித்தது. 

சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் முறைப்பாடுகளை அடுத்து டிக் டொக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது சீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு சீனா நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment