புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் (களுபோவில வைத்தியசாலை) பணிப்பாளராக பணியாற்றிய அவருக்கு, தற்போது குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நியமனம் நேற்று இரவு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (27) காலை வைத்தியர் அசேல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்த வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment