யாழ்.குருநகரில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் கொரோரோனா செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனங்களில் மீன் கொண்டு சென்றிருந்த நிலையில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரும், பருத்துறையை சேர்ந்த ஒருவரும் பாசையூர் பகுதியில் உள்ள கடலுணவு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையிலேயே குறித்த இரு கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
No comments:
Post a Comment