கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை வீடுகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை வீடுகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டு கிளினிக் மருந்துகளை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன், பின்னர் இதனை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருவது பொருத்தமானது அல்ல என்று சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சையை பெறுவதில் எதிர்நோக்கப்படும் நெருக்கடி காரமணமாக நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் என்றும் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment