ஓட்டமாவடி நிருபர்
சமூக நல ஆயுள்வேத வைத்திய அதிகாரி டாக்டர் எம். எம்.எம். நிம்சாத் அவர்களினால் இன்று (27) கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று போன்ற பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு சுவதாரணி பானய ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டது.
தற்பாது வாழைச்சேனை பிரதேசத்தில் பரவலடைந்து வரும் கொரானா மற்றும் டெங்கு நோயின் காரணமாக சுகாதார துறையினர் வேலைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் நோயாளர்கள் என சந்தேகிப்படுவர்களில் தனிமைப்படுத்தலிலுள்ளவர்களுடன் நேரடி தொடர்புகளை சுகாதார துறையில் வேலை செய்பவர்களுக்கு காணப்படுவதினாலும் இச்சுவதாரணி பானயத்தை சுகாதார துறையிலுள்ளவர்களுக்கு வழங்கியதாகவும் டாக்டர் எம்.எம்.எம். நிம்சாத் தெரிவித்தார்.
இரண்டு கோப்பை கொதி நீரில் அரை தேக்கரண்டி தூளிகளை இட்டு சிறிது நேரத்தின் பின் வடிகட்டி தேன் அல்லது சீனி சேர்த்து தினமும் இரண்டு வேலை பருகுமாறும் அத்துடன் இது உடனடியாக தயாரிக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பருகுவதினூடாக உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர் எம்.எம் .எம். நிம்சாத் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment