இலங்கைக்கான சுவிற்சர்லாந்துத் தூதுவர் டொமினிக் / பேர்க்லர் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அரசாங்கம் தெளிவான சட்டதிட்டங்களை அமுலாக்கி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சுவிஸ் தூதுவர் பாராட்டினார்.
ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலா முதலான துறைகள் பற்றியும், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கூடிய துறைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
சுகாதார ஆலோசனைகளை அமுலாக்குவதும், நாட்டில் முடக்க நிலையைப் பிரகடனப்படுத்துவதும் சகலருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும் விடயங்களே. ஆனால், அது மக்களின் பாதுகாப்பிற்கு வழிவகுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கொவிட்-19 தொற்று ஓய்ந்ததன் பின்னர், இங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவி செய்யப்போவதாக தூதுவர் குறிப்பிட்டார்.
சுவிற்சர்லாந்து அரசாங்கம் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் உதவி செய்யும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்காக பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment