ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி பேரெட்டை நியமிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற ஒரு வாரமே இருக்கும் நிலையில் அந்தத் தெரிவு டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினரின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி 4 வாக்குகள் வித்தியாசத்தில் ஏமியின் நியமனத்தை செனட் சபை அங்கீகரித்தது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு. அவர்களில் ஒரு பெண் நீதிபதியாக இருந்து வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் கடந்த மாதம் புற்றுநோயால் காலமானார். இதனால் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பதவி வெற்றிடமானது. 

இதையடுத்து மேல்முறையீட்டு நீதிபதியான ஏமி கோனி பேரெட்டை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்தார். எனினும் ட்ரம்பின் இந்த நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட்ட பின்னரே வெற்றிடமாக இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை நிரப்ப வேண்டும் என்றும் எனவே ட்ரம்பின் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் ஜனநாயக கட்சி வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் நியமனம் தொடர்பாக ட்ரம்பின் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இதில் ட்ரம்பின் நியமனத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 48 வாக்குகளும் விழுந்தன. இதன் மூலம் ஏமி கோனி பேரெட்டை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.

அதனை தொடர்ந்து ஏமி கோனி பேரெட் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment