வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித சிக்கலும் இல்லை - பிரதி பொலிஸ்மா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித சிக்கலும் இல்லை - பிரதி பொலிஸ்மா அதிபர்

(எம்.மனோசித்ரா) 

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளை பேணிய முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் கிடையாது என பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது சுகாதாரத் துறையினருக்கும் பொலிஸாருக்கும் புதிய விடயமல்ல. 

நேற்று வரை சுமார் 35000 பேர் அவரவர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரை ஒரு இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வௌ்வேறு சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் சுகாதாரத் துறையினரால் ஒட்டப்படும். அந்த அறிவித்தல் ஒட்டப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இந்த கண்காணிப்பு சேவைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். 

மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதோடு சட்டத்திற்கேற்ப அனைவரும் செயற்படுவார்களாயின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் பிரச்சினையாகாது என்றார்

No comments:

Post a Comment