(ஆர்.யசி)
மரண தண்டனை குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுவிக்க எவரும் எவ்வாறான கோரிக்கையும் முன்வைக்க முடியும். ஆனால் அவரது விடுதலை குறித்த தீர்மானம் நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு அமையவே இடம்பெறும் என்கிறார் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வேளையில் தும்பிந்த சில்வாவின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எந்தவொரு அமைப்பிற்கும், எந்தவொரு தனி நபருக்கும் சிறையில் உள்ள எவரையும் விடுவிக்க கோரிக்கை முன்வைக்க முடியும். ஆனால் தீர்மானங்கள் அனைத்துமே நாட்டின் சட்டத்திற்கு அமையவே முன்னெடுக்கப்படும். நடைமுறையில் உள்ள சட்டம், நீதிமன்ற கட்டமைப்பிற்கு அமையவே செயற்பட முடியும்.
இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்.
கேள்வி:- அவரது விடுதலைகான ஆவணத்தில் ஆளும் தரப்பில் எவரும் கைச்சாத்திட்டுள்ளனரா?
பதில் :- அது குறித்து எனக்கு தெரியாது, நான் எந்த ஆவணத்தையும் பார்க்கவில்லை. என்றார்.
No comments:
Post a Comment