கொவிட் கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன - உலக வங்கியின் தெற்காசிய பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

கொவிட் கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன - உலக வங்கியின் தெற்காசிய பணிப்பாளர்

இலங்கையில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் உலக வங்கியின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பாரிஸ் ஹாட் சர்வுஸ் (Mr. Faris Hadad Zarvos) தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் திருமதி. பவித்ரா வன்னியாராச்சியுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த விடயங்களை கூறினார்.

இதன்போது விசேடமாக உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொவிட்-19 வைரஸை ஒழிப்பதற்காக இலங்கை சுகாதார பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருப்பதாகவும் உலக வங்கியின் இலங்கை பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்து தெரிவிக்கையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பமானது தொடக்கம் உலக வங்கி பாரியளவில் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டுவதாக தெரிவித்தார்.

இதேபோன்று இலங்கை சுகாதாரதுறையில் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார வேலைத் திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கும் ஒத்துழைப்பை சுகாதார அமைச்சர் என்ற ரீதியில்; நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் திருமதி. சீயோ கந்தா ( Mr. Faris Hadad Zarvos) உலக வங்கி திட்டத்தின் பொதுமக்கள் சுகாதார சேவை தொடர்பான விசேட நிபுணர் டொக்டர். தீபிகா ஆட்டிகல சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment