இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று - முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 22, 2020

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று - முன்னாள் சபாநாயகர் கரு

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (வியாழக்கிழமை) என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் சர்வாதிகார ஆட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1933ஆம் ஆண்டு ஜேர்மனிய பாராளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது பாராளுமன்றம் செய்து விடக்கூடாது எனவும் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment