இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவைத் தெரிவித்து வாக்களிப்போரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று காலை நடந்த கட்சிக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் இரகசியப் பேரங்களை நடத்தியதாக வெளியான தகவல்களையடுத்தே இந்த முடிவை இன்று காலை அவசரமாகக் கூடிய கட்சி எடுத்துள்ளது.
இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவைத் தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் டயானா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
No comments:
Post a Comment