கடந்த ஆண்டு, உயிர்ந்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா முன்னிலையாகியுள்ளார்.
குறித்த ஆணைக்குழு முன்பு சாட்சியம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இன்று (22) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து கைதுசெய்யப்பட்ட அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment