அனைத்து தொழிற்சாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை - ஊழியர்களை கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு இராணுவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

அனைத்து தொழிற்சாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை - ஊழியர்களை கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு இராணுவம்

அதிகளவான தொழிலாளர்களை கொண்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று சம்பவத்தைத் தொடர்ந்து அதிகளவான தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

"பிரெண்டிக்ஸ் சம்பவத்திற்குப் பின்னர், முன்னெச்சரிக்கையாக எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனையை தொடர்ச்சியாக நடத்த அதிகளவான தொழிலாளர்களை கொண்ட அனைத்து தொழிற்சாலைகளுக்கும் நாங்கள் தகவல் கொடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

எவராவது வைரஸுடன் அடையாளம் காணப்பட்டால், அனைத்து ஊழியர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதே விதிமுறையாகும் என்று அவர் கூறினார். 

இதற்கிடையில், நேற்று தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மினுவங்கொடை தொழிற்சாலையின் சில ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று தம்மை அடையாளப்படுத்த தவறிவிட்டனர். இதன் விளைவாக, இந்த ஊழியர்களை கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவலுக்கான மூலத்தை கண்டறிய சுகாதார தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment