அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய பழைய மாணவர் அமைப்பின் பூரண பங்களிப்போடு, பாடசாலை வகுப்பறைகளுக்கான "வகுப்பறைப் பெயர்ப்பலகை" உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (07) மாலை பாடசாலையில் நடைபெற்றது.
பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் ஆசிரியர் எம்.ஐ.எஸ்.எம்.நபீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதம அதிதியாகவும், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை அதிபர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இந்த பழைய மாணவர் அமைப்பு தங்களது பொருளாதார மற்றும் கால நேரங்களை பாடசாலைக்கு அர்ப்பணிப்போடு, முடியுமான வரை பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தோடு ஒன்றினைந்து செயற்படுவதால் பாடசாலையின் பெளதீக மற்றும் மாணவர்களின் அடைவு மட்ட உயர்வு விடயத்தில் வெற்றி கொண்டிருக்கின்றோம். நாம் அவர்களுக்கு கொடுத்த இந்த செயற்திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்து எம்மிடம் ஒப்படைத்திருப்பது எமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதற்கு முன்னரும் பாடசாலையின் பெளதீக தேவைகளை பூர்த்தி செய்தும் மற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான பரீட்சைகளையும் நடாத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள். எதிர்வரும் காலங்களிலும் இவர்களுடைய சேவை மற்றும் ஒத்துழைப்பு எமது பாடசாலைக்கு நிறைவாக கிடைக்க வேண்டும் என்று பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment