யாழில் இருவருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

யாழில் இருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரும் கடந்த வாரம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் இரண்டு பேரும் கோவிட்-19 சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment