கொவிட்-19 இன் மூலம் பாதிப்புக்குள்ளான கிழக்கு மாகாண பகுதிகளுக்கு உரிய முறையில் நிவாரணத் திட்டங்களை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொட்ரபில் அவர் மேலும் அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் நாட்டில் இன்று பரவலாக கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மக்களின் இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விசேட நிவாரணத் திட்டங்களை வழங்கியுள்ளது.
இதேபோன்று கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் தனது நிவாரணப் பணியினை எவ்வித பாகுபாடின்றி ஏனைய பகுதிகளுக்கும் அரசாங்கம் தனது நிவாரண பணியினை மேற்கொள்வது போன்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் இத்தாக்கத்தின் காரணமாக முடக்கப்பட்டு அப்பிரதேசங்களில் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் இந்த விடயத்தில் மிக அவதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்படுவதன் மூலமே தம்மையும் பாதுகாத்து எம்மை சூழவுள்ள உறவினர்கள் மற்றும் அயலவர்களை இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருப்பதற்கு வழி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நமது ஒவ்வொருவரினதும் வீட்டு வாசல் கதவினை தட்டிக் கொண்டிருக்கிறது. என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுமாறும் இந்த விடயத்தில் பொடுபோக்காக இருக்காமல் கொரோனா வைரசின் தாக்கத்தை இல்லாமல் செய்ய உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு சுகாதார அதிகாரிகள் தமது பணியை முன்னெடுக்க உதவுமாறும் பா.உ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவுகையானது மிக வேகமாக இருப்பதால் மக்கள் இருக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதுதடன் தேவையற்ற பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
No comments:
Post a Comment