மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது, நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அவர்கள் வழங்கவில்லை - பிரதி பொலிஸ்மா அதிபர் கவலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது, நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அவர்கள் வழங்கவில்லை - பிரதி பொலிஸ்மா அதிபர் கவலை

வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மக்கள் தாமாக உணர்ந்து செயற்பட வேண்டும். நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அந்த மக்கள் வழங்கவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மார்ச் 11 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் இதுவரையில் 28 வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவற்றில் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையிலேயே அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 

ஆனால் இதுவரையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் எந்தவொரு வைத்தியருக்கும் தாதியருக்கும் தொற்று ஏற்படவில்லை. இவர்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பேணியமையே இதற்கான காரணமாகும். 

மக்களும் இவற்றை முறையாக பின்பற்றினால் நாமும் இலகுவில் கொரோனாவிலிருந்து மீள முடியும். மக்கள் ஒத்துழைப்பு வழங்காமல் வெறுமனே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. 

கம்பஹா மாவட்டத்தில் 14 மணித்தியாலயங்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மக்களதும் கடை உரிமையாளர்களதும் செயற்பாடுகள் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. 

பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தி எம்மால் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் தாமாக உணர்ந்து செயற்பட வேண்டும். நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அந்த மக்கள் வழங்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment