கொழும்பில் இருந்து கிளிநொச்சி மற்றும் மன்னார் வந்த புகையிரத்தில் மோதி இருவர் மரணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

கொழும்பில் இருந்து கிளிநொச்சி மற்றும் மன்னார் வந்த புகையிரத்தில் மோதி இருவர் மரணம்

கிளிநொச்சி மற்றும் மன்னாரில் இருவேறு சம்பவங்களில் ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (7) இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வருகை தந்த புகையிரத்தில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் ஒரு நபர் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வருகின்றது. சடலம் அடையாளம் காணப்படவில்லை. சடலம் மீட்கப்பட்டு தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி இன்று காலை பயணித்த ரயிலில் மோதுண்டு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment