மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உணவக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
55 வயதான அவர் பொலிஸ் அல்லாத சிவில் குடிமகன் எனத் தேசிய கொரோனா வைரஸ் தொற்று ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரின் மகன் மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்றும் அவருக்குத் தொற்று உறுதியான நிலையில் அவரின் தந்தைக்கு வைரஸ் பரவியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
இவரின் சிறிய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment