ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகொப்டர்களில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad