சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கிற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கிற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை

கல்முனன சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கின் அபிவிருத்திக்காக கடந்த 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கும் தருவாயில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவ்வேலைத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இவ் உள்ளக விளையாட்டு அரங்கத்திற்கான வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஷ் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம பொறியியலாளர்களை ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதை தொடர்ந்து அதற்குறிய வேலையினை விரைவான முறையில் ஆரம்பிக்க செயலாளரினால் ஒப்பந்தக்காரர்களுக்கு பணிபுரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த விளையாட்டு மைதானத்தை பூரணப்படுத்துவதற்கு தேவையான ஒட்டு மொத்த நிதியினை அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மேற்கொள்ளவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் உறுதியளித்தார்.

மேலும் அவ்விளையாட்டு மைதான நீச்சல் தடாகத்திற்குறிய வேலைகளையும் இவ்வருட இறுதிக்குள் முடித்து வைக்க செயலாளரினால் ஒப்பந்தக்காரர்களுக்கு பணிபுரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad