மரம் முறிந்து வீழ்ந்ததில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த இரு பெண்கள் பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

மரம் முறிந்து வீழ்ந்ததில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த இரு பெண்கள் பலி

பலாங்கொடை, பின்னவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மற்றுமொரு பெண் பலத்த காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றதாக, பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பெண்களும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

மற்றைய பெண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

(பலாங்கொடை தினகரன் நிருபர் – அப்துல் சலாம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad