கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தானில் பொருளாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது - முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 20, 2020

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தானில் பொருளாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது - முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முழுவதும் அழிந்து போய் விட்டது என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர்க்கட்சிகள் தலைமையிலான அனைத்து கட்சி மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு பேசினார். 

அவர் கூறும்பொழுது, ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் தூக்கிலிடப்படுவது, கொலை செய்யப்படுவது, கைது செய்யப்படுவது அல்லது தகுதி நீக்கம் என அறிவிக்கப்படுவது ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர்.

நாட்டில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய எந்த பிரதமரும் அனுமதிக்கப்படுவதில்லை என ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முழுவதும் அழிந்து போய் விட்டது.

பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு நேபாளத்தின் ரூபாய் மதிப்பிற்கும் கீழே சென்று விட்டது. ஆளும் அரசு (பிரதமர் இம்ரான் கான்) வேலைக்காகாத அரசு. அரசியல் சாசனத்துடன் விளையாடும் உரிமையை நீதிமன்றம் சர்வாதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அதனை பின்பற்றுவோர் இன்னும் சிறையிலேயே உள்ளனர் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment