மின்சார பாவைனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்க்க நடமாடும் சேவை அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 20, 2020

மின்சார பாவைனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்க்க நடமாடும் சேவை அறிமுகம்

மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனம் பிரைவேட் லிமிடெட் (லெகோ) ஆகியவற்றுடன் இணைந்து மின்சார பாவைனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக முதன்முதலாக நாட்டின் மாகாண மட்டத்தில் நடமாடும் சேவையை அறிமுகப்படுத்தியது. 

முதலாவதாக தென் மாகாணத்தில் நடைபெற்ற இந்த சேவையில் 500 க்கும் மேற்பட்ட மின்சார பாவனையாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். 

இந்த நடமாடும் சேவை அனைத்து மாகாணங்களிலும் நடாத்தப்படவுள்ளதோடு மின்சார பாவனையாளர்களின் மின்சார முறைப்பாடுகளுக்கு தீர்வையோ அல்லது நடைமுறையையோ வழங்கி, பின்னர், தகவல்கல் தேவைப்படும் பாவனையாளர்களுக்கு ஒழுங்குறுத்துகை கருவிகளைப் பகிரவும், சேவை வழங்குநர்களால் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தப்படும். 

மேலும், பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள வழியனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், புதிய மின்சார இணைப்புகளை வழங்குதல் போன்ற பல சேவைகள் இந்த நடமாடும் சேவையால் வழங்கப்படுகின்றன. 

“அரசு ஊழியர்கள் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவை செய்ய வேண்டும் என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவாகும். எனவே, இந்த சேவையை பெற்று, உங்களிடம் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள பொதுமக்களை அழைக்கிறேன்” என காலி மாவட்டத்தின் அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான சோமரத்ன விதானபதிரன, தென் மாகாணத்தில் 2020 செப்டம்பர் 17ஆம் திகதி ஹோல் டி கோல் மண்டபத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் ஆரம்ப விழாவில் கூறினார். 

தென்மாகாண நடமாடும் சேவையின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 500 புகார்கள் பெறப்பட்டதோடு, கிடைக்கப் பெற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டன. முறைப்பாடுகளில் பெரும்பாலானவை வழியனுமதி பற்றியவை, மொத்தமின் வழங்கள் (ஏலம் விடப்பட்ட), நிலங்களுக்கு மின்சாரம், மின்மானி மாற்றல், புதிய இணைப்பு மற்றும் மின்சார இணைப்புகளின் பெயர் மாற்றம் போன்ற பல முறைப்பாடுகள் இங்கு தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஆணைக்குழுவிற்கு 2020 ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை 865 மின்சாரம் சார்ந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது, அதேவேளை 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1382 ஆக இருந்தது. 2020 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1244 மின்சார முறைப்பாடுகளை எளிதாக்க முடிந்தது. 

இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை வழியனுமதி, மின் கட்டணம், புதிய இணைப்புகள், மின்மானி தொடர்பானதுடன் மின்சார தரம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியதாகவும் இருந்தன. 

நடமாடும் சேவையின் அடுத்த மக்கள் சந்திப்பு இலங்கையில் வட மத்திய மாகாணத்தின் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நவம்பர் மாதத்தில் அனுராதபுர மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. 

மேலதிக தகவல்களுக்கு பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஜெயசூரியன் 0762399071 அவர்களை தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment