பொலிஸ் நிலையத்தினுள் கைதி ஒருவர் தற்கொலை - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

பொலிஸ் நிலையத்தினுள் கைதி ஒருவர் தற்கொலை

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய சிறையில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை, உக்கல்பட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (13) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சிறைக்கூடத்தில் இருந்த விரிக்கையின் உதவியுடன் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபருக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளதுடன் அவற்றில் 9 வழக்குகள் போதைப்பொருள் சம்பவங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad