கல்முனை விசேட அதிரடிப்படையினரால் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

கல்முனை விசேட அதிரடிப்படையினரால் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு

ரி-56 ரக துப்பாக்கி விசேட அதிரடிப்படையினரால் மீட்பு
மதகு ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று(14) இத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

மருதமுனை துறைநீலாவணை இணையும் களப்பு பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகிலேயே இத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்த காலங்களில் பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து தாக்குவதற்கு விடுதலைப்புலிகள் அக்காலத்தில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி துருப்பிடித்து மீள இயக்க முடியாமல் காணப்படுகிறது.

மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பாதிகாரி எம்.எச். அமில மதுரங்க வழிகாட்டலில் தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி விசேட அதிரடிப்படையினரின் முகாமில் பாராப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை நிருபர் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad