ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்காக 20 ஆவது திருத்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதே தமது பிரதான நோக்கம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 'வெல்வோம்' தேர்தல் பிரசார நிலையங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை அநுராதபுரம் மாவட்டத்தை முதன்மைப்படுத்தி இடம்பெற்றது.
இதன்போது அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் விகாரை ஒன்றுக்கு சென்று வழிபட்ட பிரேமதாச பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாடு பல பாதிப்புகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும். அதனூடாக ஜனநாயக கொள்கைகளுக்கும் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து இருக்கின்றது. இந்நிலையில் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதே எமது பிரதான நோக்கம்.
நாங்கள் 20 ஆவது திருத்த சட்டமூலத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் கருத்து தெரிவித்திருந்ததுடன், அதற்கு வெளியிலும் அது தொடர்பில் பேசியிருந்தோம். இந்நிலையில் இந்த திருத்தத்தை தோல்வியடையச் செய்வதற்காக தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.
No comments:
Post a Comment