யாழில் வாள் வெட்டுக் குழு தலைவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

யாழில் வாள் வெட்டுக் குழு தலைவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று (26) நண்பகல் வழிமறித்து துரத்தி அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment