எதிர்தரப்பிலிருந்து அரசாங்கத்தில் இணைய 20 பேர் தயாராவுள்ளனர் - மஹிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

எதிர்தரப்பிலிருந்து அரசாங்கத்தில் இணைய 20 பேர் தயாராவுள்ளனர் - மஹிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 20 வது திருத்தத்தை சபையில் முன்வைத்த பின்னர் பாராளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிரணியில் பதாதைகளை ஏந்திக் கொண்டிருக்கும் 17 பேர் எம்முடன் இணைந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கும். இவர்களின் பெயர்களை கூற நாம் விரும்பவில்லை. 

இந்நிலையில் ஆளும் கட்சியில் சேரத் தயாராகும் உறுப் பினர்கள் ஏற்கெனவே பிரதமர் மற்றும் பிற அமைச்சர் களுக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்து சலுகைகளைக் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad