கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

கொரோனா அச்சம் காரணமாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஏனையவர்களையும் தனிமைப்படுத்தும் முகமாக நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த காலப்பகுதியில் அவசர சேவைகளுக்காக 74703413, 70088771 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவசர சேவைகளுக்காக consular.doha@mfa.gov.lk என்ற இணையத்தளமூடாகவும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad