தொழில் பெற்றுத்தருவதாக போலியான படிவங்களுடன் கல்முனையில் மோசடி கும்பல் : மக்களை அவதானமாக இருக்க கோருகிறார் றிசாத் ஷரிஃப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

தொழில் பெற்றுத்தருவதாக போலியான படிவங்களுடன் கல்முனையில் மோசடி கும்பல் : மக்களை அவதானமாக இருக்க கோருகிறார் றிசாத் ஷரிஃப்

நூருல் ஹுதா உமர் 

ஏற்கெனவே கல்முனை பிரதேசத்திற்காக தேசிய காங்கிரஸினால் ஒதுக்கப்பட்ட வேலை வாய்ப்புப்படிவங்கள் யாவும் தகுதியானவர்களை தெரிவுசெய்து பூர்த்தி செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டன என்று தேசிய காங்கிரசின் கல்முனை பிரதேச பிரதானி பிரபல ஆசான் றிசாத் ஷரிஃப் தெரிவித்தார்.

இப்போது போலியாக தயாரிக்கப்பட்ட படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். அதை நம்பி யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்றும், அவர்களினால் மேற்கொள்ளப்படும் திருட்டு வேலைகளுக்கு தேசிய காங்கிரஸ் ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டாது என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேசிய காங்கிரஸினால் ஏழை மக்களின் வாழ்வுக்கு உதவும் முகமாக தொழில் வாய்ப்புக்களை அரசினுடாக பெற்றுக் கொடுக்க எடுக்கும் முயற்சியின் பயனாக மேற்கொள்ளப்படும் இவ்வேலைத்திட்டத்தில் மக்களை ஏமாற்றும் பணியில் போலியாக தயாரிக்கப்பட்ட படிவங்களை விநியோகித்து மோசடிகளில் சிலர் ஈடுபட்டுவருவதாக மக்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. 

அவ்வாறு தொழில் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து பணம் கோரினால் என்னிடமோ அல்லது பொலிஸாரிடமோ அவசரமாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தேசிய காங்கிரசின் கல்முனை பிரதேச பிரதானி றிசாத் ஷரிஃப் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment