பெண்கள், சிறுவர்களை கொன்ற படை வீரர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

பெண்கள், சிறுவர்களை கொன்ற படை வீரர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

2015 ஆம் ஆண்டில் இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டு நான்கு கெமரூன் நாட்டு படை வீரர்கள் மீது தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை இடம்பெறும் வீடியோ ஒன்று 2018 ஆம் ஆண்டு இணையத்தில் பரவியது. இதில் அந்தப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கண்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர்.

இது ஒரு போலிச் சய்தி என்று அரசு ஆரம்பத்தில் நிராகரித்தபோதும் பின்னர் இது தொடர்பில் ஏழு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். வடக்கு கெமரூன் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அந்தப் பெண்கள் பொக்கோ ஹராம் குழுவுடன் தொடர்புபட்டவர்கள் என்று படையினர் குற்றம்சாட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதில் பெண்ணின் பின்புறமாக சுமந்து இருந்த குழந்தை ஒன்றும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகிறது. இவர்கள் கண்கள் கட்டப்பட்டு வீதி நெடுகிலும் அழைத்துச் செல்லப்பட்ட பின் 22 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இது தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இருவர் விடுவிக்கப்பட்டதோடு இதனை வீடியோ எடுத்த வீரருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment