சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

சீனாவுக்காக உளவு செயற்பாட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகர பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திபெத்தில் பிறந்த பைமட்ஜி அங்வங் என்ற அந்த அதிகாரி நியூயோர்க் பகுதியில் திபெத் பிரஜைகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரது சேவைக்காக சீன நிர்வாகம் அவருக்கு பல்லாயிரம் டொலர்களை செலுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்கள சமூக விவகாரங்கள் பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற வாய்ப்பு உள்ளது.

1912 தொடக்கம் 1950 வரை ஒரு சுயாட்சி பெற்ற பகுதியாக இருந்த திபெத்தை 1951 இல் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா 1959 தொடக்கம் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் வாழ்ந்து வருகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad