மட்டக்களப்பில் கடலில் கரைவலை மூலம் மீன் பிடிக்க முடியாத வகையில் கற்கள் இடப்பட்டுள்ளமையைக் கண்டிந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

மட்டக்களப்பில் கடலில் கரைவலை மூலம் மீன் பிடிக்க முடியாத வகையில் கற்கள் இடப்பட்டுள்ளமையைக் கண்டிந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளைக் கடலில் கரை வலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் புதன்கிழமை (23) கடற்கரையில் வைத்து தமது வலைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தாம் கடலில் கரைவலையிட்டு மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டுவதாகவும், அதனைத் தடை செய்யும் வகையில் சிலர் செவ்வாய்கிழமை (22) நள்ளிரவு வேளையில் மிகவும் பாராமான காற் தூண் துண்டணங்களை கரையிலிருந்து சுமார் 100 தூரமளவிற்கு கடலில் ஆங்காங்கே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதனால் புதன்கிழமை காலையில் தாம் வளக்கமாக கரைவலைவிட்டு இழுக்கும்போது வலை கற்துண் துண்டங்களுக்குள் அகப்பட்டு, எம்மால் இழுக்க முடியாத அளவிற்குப் போய்விட்டது. பாரிய மீன்கள் அகப்பட்டு விட்டதாக நினைத்தோம், பின்னர் அதனை நன்கு கூர்ந்து, அவதானிக்கையில் மிகவும் பாரமான கொண்றீட் துண்டங்களில் வலைகள் சிக்கப்பட்டுள்ளதை கண்ணுற்றோம்.

பின்னர் வலைகளை இழுக்க முடியாமல் இடை நடுவே எமது வலைகளை கத்தியால் இடை நடுவே அறுத்து எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

செவ்வாய்கிழமை (22) இதே கடற்கரையில் எதுவித அசம்பாவிதங்களுமின்றி கரைவலையிட்டு மீன்டித்தோம். இன்று இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இது போன்றதொரு நிலமை கடந்த வருடமும் எமக்கு ஏற்பட்டிருந்தது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீனர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் அப்பகுதி கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி ஒரு சிலர் மீன்பிடிப்பதாக கடற்றொழில் திணைக்கத்திற்கு குறித்த கரை வலை மீனவர்கள் தெரிவித்திருந்த நிலையில் துரிதமாகச் செயற்பட்ட கடற்றொழில் திணைக்களத்தினர் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கடலில் பதுக்கி வைத்திருந்த மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற 2 வலைகளைக் கைப்பற்றியதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனைப் பெறுத்துக் கொள்ளாத நபர்களாலேயே தமது கரை வலை மீன்பிடியைத் தடைசெய்யும் வண்ணம் இவ்வாறு கடலில் கற்தூண்களைப் மிகவும் சூட்சுமமான முறையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக கரைவலை மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால் தாம் லட்சக்கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், தமது வலைகளும் முற்றுமுழுதாக இல்லாமால் போயுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கரை வலை இழுப்பதற்காக நாளாந்த தொழிலுக்கு வந்த கூலி வேலையாட்களும், தமக்கு இன்றையதினம் தொழிலில்லாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும், இனிமேல் புதிதாக வலைகளைக் கொள்வனவு செய்துதான் மீண்டும் தொழிலுக்குத் திரும்ப வேண்டும். எனவே அரசாங்கம் எமக்கு நட்ட ஈட்டைப் பெற்றுத் தருவதோடு. சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment