கையில் செருப்பு, அருகில் தலைக்கவசத்துடன் ஆணின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, July 26, 2020

கையில் செருப்பு, அருகில் தலைக்கவசத்துடன் ஆணின் சடலம் மீட்பு

கையில் செருப்பு; அருகில் தலைக்கவசம்; ஆணின் சடலம் மீட்பு-Male's Body Found at Ginigathhena
பொல்பிட்டிய சமனல நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீகப்பட்டுள்ளது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆணின் சடலம் பொல்பிட்டிய சமனல நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் இன்று (26) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

வீதியில் சடலம் கிடப்பதனை கண்டு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலினையடுத்தே குறித்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மரணமடைந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலத்திற்கு அருகில் தலைக்கவசம் ஒன்று காணப்படுகின்றபோதிலும், மோட்டார் சைக்கிள் எதுவும் அருகில் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், குறித்தநபர் கையில் செருப்பை பிடித்தவாறு மரணித்துள்ளதாகவும், தெரிவித்தனர்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்துள்ளாரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad