(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத உரிமையினை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த பௌத்த பிக்குகளுக்கு பிரதி உபகாரம் செய்யும் விதமாகவே புராதான தொல்பொருளினை பாதுகாக்கும் விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பௌத்த பிக்குகள் பாரிய இன்னல்களுக்கும், உளவியல் தாக்கங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதை ஒருபோதும் மறக்க முடியாது என குறிப்பிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவத்தின் 33வது வருட நிறைவினையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவர் அந்த அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது அர்ந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவம் இடம்பெற்று 33 வருடங்கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களின் பின்னர் இடம்பெற்ற மிகவும் கொடூரமான படுகொலையாகவே இதனை கருத முடியும். இச்சம்பவம் இடம்பெற்ற போது நாடு முழுவதும் அமைதியற்ற சூழலே காணப்பட்டது.
திகாமடுல்லை இராசதானியாக கருதப்படும் அம்பாறை பகுதியில் உள்ள சிங்கள கிராமங்களில் பிள்ளைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். லவுஹல, உஹன, தமன, தெய்யந்தகண்டிய, பதியதலாவ, மவோய, ஆகிய பிரதேசத்தில் வசித்த மக்களை தாக்குதலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்தனர்.
புத்த மதத்தை பாதுகாத்தல், வளர்ச்சி பெற செய்தல் ஆகியவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், பௌத்த மதம், மநாயக்க தேர்ர்கள், பிக்குகள் அக்காலக்கட்டத்தில் பாதுகாக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் எகொட இந்ரசார தேரர் அம்பாறை பிரதேசத்துக்கு சென்று அம்பாறை மஹாவாவி பிரிவெனா மற்றும் பிரிவெனாக்களை அமைத்து பாதிப்புற்றிருந்த பௌத்த மத உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டார்.
பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை வெறுத்து எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தேரரை அடக்கும் முயற்சினை விடுதலைப் புலிகள் அமைப்பினர் முன்னெடுத்தனர்.
இந்த தேரர் தனது 41 சீடர்களை அழைத்துக் கொண்டு மத யாத்திரை சென்று கொண்டிருந்த வேளை விடுதலை புலிகள் இவர்கள் மீது மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது 31 தேரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.
இவ்வாறான தாக்குதல் இடம்பெற்ற போதும் அப்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தையும், பிக்குகளையும் பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
2005 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் வரை அனைவரும் உயிரச்சத்துடனே இருந்தார்கள். 2009 ஆம் ஆண்டில் பயங்கரவாத யுத்தம் தோற்கடிக்கப்பட்டு அனைத்து மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.
2015ம் ஆண்டுக்கு பிறகு பௌத்த மதத்திற்கு எதிரான நடவடிக்கை இடம்பெற்றமை அனைவரும் அறிந்ததே. பிக்குகள், மநாயக்க தேரர்கள் இக்காலக்கட்டத்தில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டார்கள்.
பௌத்த பிக்குகளின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டதுடன், இறந்த பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதிலும் பாரிய போராட்டம் ஏற்பட்டது. மாநாயக்க தேரர்கள் தாழ்த்தப்பட்ட வேளையிலே நிலையிலே பிரார்த்தனையின் பிரகாரம் நாட்டு தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பௌத்த மத உரிமையினை பாதுகாக்க விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டு வரலாற்று காலம் தொடக்கம் காணப்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாடு வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த மத உரிமையினை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த பௌத்த துறவிகளுக்கு செய்யும் பிரதி உபகாரமாக கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment