(நா.தனுஜா)
இம்முறை பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் இயலுமானளவிற்கு பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதையும் அது வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனையோரை எதிர்மறையான விதத்தில் பாதிக்காதிருப்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறான வழிகாட்டல் கோவையொன்றை தேர்தலை கண்காணிக்கும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தயாரித்திருக்கின்றன.
2020 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான கொவிட்-19 நடத்தைக் கோவை ஒன்றை சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், இலங்கையின் அன்னையரும் புதல்வியரும், சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களுக்கான இயக்கம், தேசிய தேர்தல்களுக்கான கண்காணிப்பு நிலையம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தர்களுக்கான மக்கள் செயற்பாடு ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளன.
அந்த நடத்தைக் கோவையில் கூறப்பட்டிருப்பதாவது, இம்முறை பாராளுமன்றத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்குத் திட்டமிடும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களாகிய நாங்கள், கொவிட்-19 நோய் தொற்றுப்பரவல் மற்றும் அந்நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுவதற்கான எமது கடப்பாட்டையும் உணர்கின்றோம்.
ஜனநாயக ரீதியான, வெளிப்படைத்தன்மை வாய்ந்த தேர்தல் செயன்முறையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஒரு முக்கியமான பிரிவினராக உள்ளனர் என்பதுடன், தற்போது நாம் முகங்கொடுக்கும் முன்னொருபோதும் இல்லாத நிலைமையில் இது உண்மையானதாகவும் உள்ளது. எமது கண்காணிப்புப் பணிக்காக சர்வதேச மற்றும் பிராந்திய தராதரங்களினால் நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச தரநியமங்களைப் பேணுவதில் நாம் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்.
எனினும் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் இயலுமானளவிற்குப் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதையும் அது வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனையோரை எதிர்மறையான விதத்தில் பாதிக்காதிருப்பதையும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம்.
எனவே பாதுகாப்பான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு வழிகாட்டல் கோவையைத் தயார் செய்திருக்கிறோம்.
அதன்படி சுகாதார அதிகாரிகள், இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றும் ஏனைய அரசாங்க முகவரமைப்புக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட்-19 தொடர்பான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு எங்களது அமைப்புக்கள் பற்றுறுதி கொண்டுள்ளன. எமது பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவற்றுக்கு அமைவாக நடப்பதையும் அவற்றை முறையாக இற்றைப்படுத்திக் கொள்வதையும் நாங்கள் உறுதிசெய்வோம்.
நேரடிச் சந்திப்புக்களின் தேவைகளை இயலுமான வகையில் மட்டுப்படுத்திக் கொள்வதற்கு, ஒன்லைன் மூலமான தொடர்பாடல்களை நாம் முன்னுரிமைப்படுத்துவோம். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் குறைந்தது ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு எங்களது அனைத்துப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.
எமது பணியாளர்கள் தமது கைகளைக் கிரமமான வகையில் அணிவதற்குத் தேவைப்படுத்தப்படுவதுடன், அதனை சரியான வகையில் எப்படி அணிந்துகொள்வது என்பதற்கு வழிகாட்டல்களும் வழங்கப்படும். பொதுப்போக்குவரதத்தினை தங்களது தேவைக்குப் பயன்படுத்துவதை இயன்றளவிற்கு சாத்தியமானவரை மட்டுப்படுத்துவதற்கு எமது பணியாளர்களை நாம் அறிவுறுத்துவோம்.
இவற்றுக்காகத் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்பதுடன், அவற்றின் உபயோகத்திற்கு முன்னரும் பின்னரும் அவை தொற்றுநீக்கப்படும்.
அவசியமானவிடத்து, தொடர்புகொண்டவர்கள் பற்றிய தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு, தாங்கள் விஜயம் செய்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் உள்ளிட்ட தமது நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புக்களைப் பேணுவதற்கு ஒரு நாளாந்த குறிப்புப் புத்தகத்தைப் பயன்படுத்துமாறு எமது பணியாளர்கள் அறிவுறுத்தப்படுவர்.
அத்தோடு எங்களது பணியாளர்கள் போதுமான சுகாதாரக் காப்புறுதி வழங்குவதற்கு நாம் ஏற்பாடு செய்வோம். சுகாதாரத் தொழில்முறை சார்ந்தவர்களின் உதவியுடன் அவர்களது உடல் ஆரோக்கிய நிலைமைகளும் கிரமமான வகையில் கண்காணிக்கப்படுவதுடன், கொவிட்-19 இன் நோய் அறிகுறிகளை அனுபவிக்கும் எந்தவொரு நபரும் தனிமைப்படுத்திக் கொள்வதற்குத் தேவைப்படுத்தப்படுவர்.
No comments:
Post a Comment