நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாறலை வரையறுப்பதற்கு அமைவாக உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை 2020 ஜுலை மாதம் 2ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறல்களை 03 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு 2020 ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைவாக வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 2020 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானியின் மூலம் தொடர்புபட்ட உத்தரவு வெளியிடப்பட்டது.
இதேபோன்று விசேட வைப்பீடு கணக்கு மூலம் நாட்டில் வெளிநாட்டு செலவாணி பணத்தை ஊக்குவிப்பதற்காக தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கென 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2017ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் 29ஆம் சரத்தின் கீழ் மற்றும் அந்த சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ் தொடர்புபட்ட விதிமுறைகளுக்கு அமைவாக 2020.04.02 மற்றும் 2020.04.08 வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த உத்தரவுகளுக்கு அமைவாக தொடர்ந்தும் கீழ்கண்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1. இந்த நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுப்பதற்கு அமைவாக உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை 2020 ஜுலை மாதம் 2ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடித்தல்.
2. விசேட வைப்பீட்டு கணக்கின் மூலம் நாட்டிற்குள் அந்நிய செலாவணி பணத்தை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை முன்னெடுக்கும்பொழுது தற்பொழுது நிலவும் அந்நிய செலாவணி சட்டம், பணத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பணத்தை பயன்படுத்துவதை தடுப்பதுடன் தொடர்புபட்ட சட்டத்திலுள்ள ஒழுங்குவதிகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறைப்பதற்காக 2017ஆம் ஆண்டு இலக்கம் 12 கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட 2020.04.08 திகதி வர்த்தமானி அறிவிப்பில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிடுதல்.
No comments:
Post a Comment