சீஷெல்ஸிலிருந்து 254 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 25, 2020

சீஷெல்ஸிலிருந்து 254 பேர் இலங்கை வருகை

இலங்கைக்கு வர முடியாமல், சீஷெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 254 பேர், இன்று (25) பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 708 எனும் விசேட விமானம் மூலம், சீஷெல்ஸின் விக்டோரியா நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இக்குழுவினர், சீஷெல்ஸ் நாட்டில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்தவர்கள் என்பதோடு, இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment